சந்தித்த காதல்
அம்மாவின் மூலம்
அன்பு என்ற காதலை சந்தித்தேன்!
அப்பாவின் மூலம்
உறவு என்ற காதலை சந்தித்தேன்!
ஆசிரியர் மூலம்
கல்வி என்ற காதலை சந்தித்தேன்!
நண்பர்கள் மூலம்
நட்பு என்ற காதலை சந்தித்தேன்!
உண்மையான காதலை சந்திக்க
ஆர்வம் இல்லை!
என்னிடம் நான் சந்தித்த காதல் அதிகம்
உள்ளது!
அருமையான காதலை சந்தித்து விட்ட
போது கூட
காதலை தேடி கொண்டு அழைக்கிறோம்!
ஏன் என்று யோசித்தால்
மேற்கண்ட அனைத்து காதலையும்
காதலிக்க கற்று கொள்வோம்!