அய்யா பெரியார் தம் உழைப்பு ..!

"ஒழுக்கம் பேணு ;பக்தி அறு
ஒவ்வாதே கடவுள் ; மதத்தை மிதி
தாலி வேலி; சமதர்மம் பாதை"என
ஒலித்த குரல் எவர் குரல் ?

"அறிவு உயிர்;மானம் ஆடை
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதம் இல்லை;
சாதி தீது;ஓது தமிழ் "என்ற
சகாத மொழி எவரின் மொழி ??

மண்பதைக் கிணையாய் தமிழினம் ஆகிட
மனம்பதை உழைப்பு யார் உழைப்பு ..?
அய்யா பெரியார் தம் உழைப்பு ..!
அதை நீ போற்றி புகழ் பரப்பு ...!!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (4-Mar-11, 7:28 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 536

சிறந்த கவிதைகள்

மேலே