தாமதிக்கிறது நிகழ்காலம்
கருவுறுதல் நிகழ்வுகளை
வரலாறுகளில்
கிழித்து....
அறிவியல் திரைகளிலிட்டுக்
கவர்ந்து....
பொருளாதாரப்
புள்ளிகள் கேட்டு
புத்தகமிட்டு.....
இயற்கை பூமலர்தல்
உவமைகளோடு
இன்னிசை பாடி.....
திறந்தவெளி மேடைகளில்
நினைவுகள்
சிலாகித்து....!!
உள்ளரங்கு
நேர்காணல்களினூடே
புகைப்படங்கள்
தழையவிட்டு....
அயர்ந்துபோன
அரைமயக்க நிலைகளில்
அம்மா
திரைப்படங்களிட்டு....
ஓய்ந்து விட்டிருக்கிறது
கொண்டாட்டங்கள்....!!!
அடுத்தநாள்.....
இழுத்துவந்து
விட்டிருந்த அம்மாக்களும்
சுயமாகப் புகுந்திருந்த
மாமியார்களும்......!!
அதிகாலை
சுப்ரபாதங்களோடு..
தியானங்கள்
தொடங்கியிருக்கிறார்கள்
முதியோர்
இல்லங்களில்...!!!