===+++ஆதியில் உணர்ந்தென்ன லாபம்+++===

கண்ணில் மழைவரும்
மனதில் கிலிவரும்
மரணம் தழுவிடும் நேரம் - இந்த
மனிதம் முழு நிர்வாணம்...

ஆட்டம் போட்டதும்
அவலம் செய்ததும்
அந்தம் உணரா பாகம் - அட
ஆதியில் உணர்ந்தென்ன லாபம்...

ஆத்திகம் மறிந்தும்
நாத்திகம் பயின்றும்
நற்பண்பினையே இழந்தாய் - நீ
நரகத்தில்தானே புரண்டாய்...

பூசைகள் செய்தும்
யாகங்கள் புரிந்தும்
கருவறை காமம் பயின்றாய் - அந்த
கடவுளைக் கொன்றே எறிந்தாய்...

உயர்ந்த புகழுக்கும்
ஊரான் பணத்துக்கும்
உண்மையை அடகாய் வைத்தாய் - நீ
ஊறுகள் செய்தே பிழைத்தாய்...

பட்டங்கள் படித்தும்
சட்டங்கள் வடித்தும்
மிருகங்கள் போலே திரிந்தாய் - நீ
புரைவழி சென்றே சரிந்தாய்...

பாவங்கள் செய்தும்
பாசிசம் செறிந்தும்
பாமர மக்களை வதைத்தாய் - அட
பரலோகம் செல்லத்தானோ குதித்தாய்?...

பாடையில் பயணம்
போகிற நேரம்
பாவங்கள் லறிந்தால் தகுமா? - இனி
பயனில்லை போய்விடு பிணமா...!!!


-------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (12-May-14, 3:39 pm)
பார்வை : 103

மேலே