கவிஞனின் காதலி

காதல்-

அகராதியில்

இரண்டு உடல்கள் வசிக்கும்

ஓர் ஆன்மா
******************************
காதல்-

இதயங்களில்

பற்றிக்கொள்ளும்

ஒரு வித நெருப்பு

தொடக்கத்தில் சுடும்

போகப் போக..ஒளிரும்
*****************************************
உன் காதல்

என்னுள்

ஏராளமான மின்சாரத்தை

உருவாக்கிவிட்டது


நீ உற்று பார்...

என் முகத்தில் தெரியும்

கடலில் தத்தளிக்கும்

படகோட்டியின் பரிதாபம்


உன்

பார்வையின்

வல்லமை.....பார்

ஒரு நொடியில்

உருமாறி விட்டேன்

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (12-May-14, 5:31 pm)
Tanglish : KAVIGNANIN kathali
பார்வை : 210

மேலே