புதிய சின்னம்
தலைவரே நாம புதுசா அரசியல் கட்சி ஒண்ண தொடங்கி இருக்கோம். இன்னும் நம்ம கட்சியின் சின்னத்தப் பத்தி முடிவு எடுக்காம இருக்கோம்.
ஆமய்யா. எனக்கு மறந்தே போச்சு. இந்தியாவே கிராமங்கள நம்பித் தான் இருக்கு. அதனால கிராமத்துக்காரங்கள குறிப்பா கிராமத்துப் பெண்கள எல்லாம் கவர்ற மாதிரி அவுங்க வீட்லெ உள்ள பொருள் நம்ம கட்சிச் சின்னம்மா இருந்தா நல்லது.
தலைவரே, தொடப்பம், செருப்பு எல்லாம் ஏற்கனவே தேர்தல் கமிஷன்லே பதிவான சின்னங்கள். நம்ம சின்னம் புதுமையா இருக்கணும்.
நீயே சொல்லுய்யா.
தலைவரே மொறந்தான் இதுவரை எந்தக் கட்சியின் சின்னமாகவும் இல்ல. அதுவே நம்ம கட்சி சின்னம்மா இருக்கட்டும்.
வெரிகுட். நல்ல ஐடியா அய்யா. 2016 லெ கோட்டைலே நாம உக்காரறது உறுதியாயிடுச்சய்யா.