எங்க ஊரு விவசாயத்தின் நினைவுகள் ,ஒரு நாள் வாழ்க்கை

கார்த்திகை மாசம்
பெய்த
மழையில
கம்மா நெறஞ்சு
தளும்பும்
வேலையில
மக்க மனசு
குளுரும்
பாரு
அதுக்கு
ஈடு இணை வேற ஏது ?


கிழக்கு வானம்
சிவக்க வில்ல
சேவ கூட
கூவ வில்ல
வயக்காட்டு
உழவு மாட்டின்
சத்தம் மட்டும்
கேட்ட போதும்
மலரை மொய்க்கும் வண்டு போல
வயலை மொய்க்கும் மக்க கூட்டம் ..!!!!

பம்பு செட்டு
தண்ணி இறைக்கும்
தண்ணி பாம்பும் செத்து மிதக்கும்
வாய்க்கால் வழியா
பாயும் தண்ணி
வரப்பு வழியா
பயிற நனைக்கும்
தெரிய தனமா கால வச்சா
கெண்ட மீனு நறுக்க கடிக்கும் ...!!!

உச்சி வெயிலு அடிக்கும் போது
கஞ்சி குடிக்க ஏற்ற பொழுது
கிணத்து பக்கம் இருக்கும் மரம் தான்
இறைவன் தந்த நல்ல வரம் தான்
ஏப்பம் விட்டு சாயிந்து கொடுத்தா
எர தாள மாலை மயங்கும்

பூச்சி மருந்த தெளிச்சு விட்டு
வெள்ள கொடிய நட்டு வச்சு
இருட்டும் வரைக்கும் தண்ணி பாய்ச்சி
இருண்ட பின்னே நடையை கட்டும்
நாட்டுபுற ஆட்கள் நாங்க
நாட்டை தாங்கும் தூண்கள் தாங்க ....!!!!!

எழுதியவர் : பா. கபிலன் (13-May-14, 1:35 pm)
பார்வை : 54

மேலே