சிரித்திடவோ ரசித்திடவோ

சிரித்திடவோ ரசித்திடவோ !!!!
அடித்திடவோ அள்ளி அனைத்திடவோ
தமிழை நீ கொலை செய்கையிலே
முறைத்திடவோ உன்னை திருத்திடவோ
தமிழ் பண்பு மறந்து நீ பேசயிலே
மறைத்திடவோ கண்ணை பறித்திடவோ
தமிழ் சீர்கேடு நீ பார்க்கும் வேலையிலே
தடுத்திடவோ வழி கொடுத்திடவோ
தமிழினை நீ விட்டு போகையிலே
மகிழ்ந்திடவோ உன்னை புகழ்ந்திடவோ
பன்மொழி நூல் தமிழில் பெயர்க்கயிலே
சிரித்திடவோ கண்டு ரசித்திடவோ
தமிழ் கவிதைகள் எழுதி நீ குவிக்கயிலே
----அருள் ஸ்ரீ ---