புது வசந்தம் தேடி
புது வசந்தம் தேடி.......
பிரியமான தோழி.....
நீ நலமா?
நாளும் பிரார்த்திக்கிறேன்
நீ நலமாய் வாழ !
கண்ணில் பட்டு
காலம் பலவாச்சு!
காத்திருந்து எனக்கும்
வயசாச்சு!
உன் குண்டு கன்னத்தில்
நான் பதித்த முத்தம்,
உன் கேசம் கலைத்து
நீ அழுத ஞாபகம்,
உன் கைகோர்த்து
சுற்றிய ஞாபகம்
உனக்காக அப்பாவிடம் நான்
உதை வாங்கிய ஞாபகம்...
எத்தனை நினைவுகள் என்னுள் !
நீ பேசும் ஒற்றைவார்த்தை....
எனக்கு
கவிதையல்லவா!
எப்படியிருக்கிறாய்
என் இனியவளே?
அடிக்கடி என் கண்ணெதிரே
தோன்றுகிறாய்.....
மறுகணமே காணாமல்
போகிறாய்.......
வருடங்கள் பல கடந்திட்டாலும்...
நீ தந்த வசந்தம் என்னுள்
மறையவில்லை!
உன் சாயலில் யாரை பார்த்தாலும்..
உன் பெயரை யார் சொல்லக் கேட்டாலும்..
அடுத்த நொடி.
என் கண்ணில்
நீர்த்திவளைகள்!
நேசிக்க மட்டுமே தெரிந்த
எனக்கு
சிநேகிக்க கற்றுக்கொடுத்தவள்
நீயல்லவா!
என் சோதனைகளை
சாதனையாக்கியவள்
நீயல்லவா!
வரமொன்று கேட்பேன் தோழி
தருவாயா! -என்
வாழ்நாளின் இறுதிக்குள் என்
வாழ்க்கைக்குள் வந்துவிடு!
மறுபடியும் எனக்குள்
புதுவசந்தம் தந்துவிடு!