திரும்பி பார்த்தேன்

கர்ப்பம் தரித்த தாய்க்குக் கூட பத்து மாதம் தான் சுமை
ஆனால், காதல் தரித்த ஆன்மாவிற்கு வாழ்க்கை முழுவதும் சுமை தான்!
எண்ண அலைகள் அடி மனதிலிருந்து எழும்ப...

பின்னோக்கி செல்கிறது.... மனது

10 வருடங்கள் ஆகி விட்டன.
நான் முன்னால் உட்கார்ந்து இருக்க நீ வகுப்பறையில் பின்னால் உட்கார்ந்திருக்க.....

நீ போட்ட வாசனைத் திரவம் என் மூக்கை தொட..
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!

நீ வாசிக்கும் வார்த்தைகள் தேன் போல காதில் தவழ
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!

விளையாட்டு விழா போது என் அணி கடைசியில் பந்தை அடித்த போது
உற்சாகத்தால் கூச்சலிட்டாய்
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!

கல்லூரியின் கடைசி நாளில் நீ என் கையில் செருகிய கடிதத்தைப் படிக்காமல்
வீட்டிற்குச் செல்லும்போது
அப்போது கூட நான் திரும்பி உன்னைப் பார்க்கவே இல்லை!

இத்தனை தடவை உன்னைத் திரும்பி பார்க்காத
என் மனது
இத்தனை ஆண்டுகள் கழித்து நீ அனுப்பி இருக்கிற திருமண அட்டை
திரும்பி பார்க்க வைத்து விட்டது.

அடட அடட.... பெரிய ஆள் நீ.

எழுதியவர் : சோ (14-May-14, 10:57 am)
Tanglish : thirumpi paarthaen
பார்வை : 216

மேலே