புதிய எண்ணம்

கஞ்சித்தண்ணி தேவ இல்ல
உன் கள்ள சிரிப்பு போதுமடா
அடுக்குமாடி தேவ இல்ல
உன் ஆறடி நிழல் போதுமடா

பட்டினிய அறியாது என் வயிறு
என் கூட நீ இருக்க
சொர்க்கம் கூட இதுபோல சுகம் தருமோ
என் நிழற்குடையாக உன் நிழலடியில் நான் இருக்க

பார்வை மோதலில் காதல் பிறந்ததுடா
பாவை என்னை மறந்தேன்னடா
பாரும் இன்று நீயென மாறியதுடா

காட்டுமரத்தில் பற்றிய காட்டுத்தீயோ
கள்ளி மனதில் புகுந்த உன் காதல் எண்ணமோ
எரிகிறேன் ஒவ்வொரு நொடியில் உன் பிரிவினால்

பகலிரவு மாற்றத்தில் என் மனதில் ஒரு தடுமாற்றமடா
பலிக்கும் என்ற நோக்கத்தில் மட்டும் காணும் என்
காதல் கனவுகளடா
அலைபேசியின் ஒலியில் உன் அழைப்பை அறிய தனியொரு பாடல்லடா

நம் அலைபேசி உரையாடலின்
தொடக்கத்தில் கண்ணாடி முன் என்னை ரசித்தும்
முடிவில் ஜன்னலின் வழியில் நிலவை ரசித்தும்
செல்கிறது என் காதலடா

நாளை ஒரு இரவு வரும்
இரவில் உன் கனவு வரும்
கனவிலும் சண்டை பிடிப்போம்
அங்கும் நால்வர் கிடையில் வருவர்
எனினும்
அக்கனவுலக நாடகயாசிரியர் இந்த கள்ளியடா
காட்சி மாற்றம் காட்சிபதிவு மாற்றம் புரிவேனடா
என் கைகோர்த்து நாம் வாழும் நிலையில் சுபம் என்று முடிபேனடா

எழுதியவர் : harihari (14-May-14, 11:33 pm)
Tanglish : puthiya ennm
பார்வை : 74

மேலே