விடியலை எதிர்பார்த்து
ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம்
ஓட்டம் கூட்டம் ஆங்காரம்
பாரதத்தின் தலையெழுத்து
பாமரனிடமா பணக்காரனிடமா?
தனித் தனியாய் நிறுத்தியும்
தவிர்த்தவரை ஒன்றிணைத்தும்
போட்டுவைத்த திட்டம் என்ன ?
போர்வை விளக்கினால் மூச்சுமுட்டும் !!
அலையாய் அலைஅலைந்து
அவதாரம் பலவெடுத்து
பொருளாதார தேவைக்கு
முதலாளிகளுடன் ஒரு கூட்டு !
பாதனியும் கட்சியின் சின்னமாகி
தலையில் தூக்கி கொண்டாடி
தலைவனை தூக்கி சுமக்கும்
தொண்டனுடன் ஒரு கூட்டு!
சண்டை சச்சரவை உருவாக்கி
ஜாதி தலைகளை கணக்கெடுத்து
எரியும் தீயில் குளிர்காய்ந்து
ஜாதியகட்சியுடன் ஒரு கூட்டு!
கருப்பா வெள்ளையா மனிதனென
கருத்துக்கு நடுவே கொடிபிடித்து
கருப்பு பணத்தை வெள்ளையாக்கிட
கழக்கட்சியுடன் ஒருகூட்டு !
இரத்தம் சிந்தி உழைக்கும்
உழவழின் இரத்தம் குடித்து
உனக்கு துணை நானிருப்பெனென
கபடமாடும் கட்சியுடன் ஒருகூட்டு !
இலவசம் தந்தே கொள்ளையை மறைக்க
கொள்கையே இல்லா கட்சிகள் ஒருபக்கம் !
உண்டியல் ஏந்தி உணவுக்கு வழியற்றவனாய்
ஊருக்கு உபதேசிக்கும் கபடக்கட்சிகள் ஒருபக்கம்!
நேற்றுபெய்த மழையில்
முளைத்த காளான் போலே
புற்றீசலாய் முளைத்து சுயலாபத்துக்காக தொடங்கிய கட்சிகள் ஒருபக்கம்!
தேசத்தின் சுதந்திரம் எம்மாளே
தேசத்தந்தையை எம்முரவேவென
தேசத்தில் அன்னியர்க்கு முதலிடம்தந்து
தேசப்பற்றுடன் இருப்பதாய் கபடகட்சி ஒருபக்கம்!
எத்தனை மேடை
எத்தனை நாடகம்
எத்தனை நாட்கள்
எத்தனை மக்கள் விழுந்தாரோ !
மொத்த கூத்துக்கும்
மதிப்புரையாய் விரலில் இட்டமை
உண்மையோ !பொய்மையோ !
விடிந்தால் தானே விடைதெரியும் !!
ஏழையின் கண்ணீர் துடைப்படுமா ?!!
ஏழையின் கண்ணீர் பெருகிடுமா?!!
ஏழையே இல்லா நாடாய் உருமாரிடுமா?!!
ஏழை நாடென இவ்வுலகே எண்ணிநகையாடுமா?
விடியலை தேடும் இந்தியாவின்
விழி திறந்து விடியலை காணுமா?
விடியலை எதிர்நோக்கி கண் திறந்தே
விடியாமலே முடிவுருமா ?
நாளைய விடியல்
சரித்திரமா? இலை
தரித்திரமோ !!
விடியலை எதிர்நோக்கி ...