பாரதம்

பாரதம் !!!!!!

கவிதை கொண்டு காலம் வென்று நின்ற நமது பாரதம்
ஓவியத்தில் காவியத்தை தீட்டி வைத்த பாரதம்
சிலைகள் தன்னில் கலைகள் தன்னை ஒளித்து வைத்த பாரதம்
ஆலயத்தில் ஆன்ம லயம் கண்ட நமது பாரதம்
யோகத்தாலே போகம் தன்னை வென்ற நமது பாரதம்
உலகம் உய்யும் வழியை அறிந்து உரைத்தது நம் பாரதம்
கணவன் மட்டும் காதலனாய் கொண்ட நமது பாரதம்
படை மிரட்டும் வீரம் கொண்டு விளங்கும் நமது பாரதம்
பகைவனையும் வாழவைத்து வாழும் நமது பாரதம்
கவிதைகளால் காலம் வென்று நிற்கும் நமது பாரதம்
எழுச்சி மிக்க அறிவு கொண்ட இளைஞனே நம் பாரதம்
ஏழுலகம் ஆளவந்த பாரதம் நம் பாரதம்

---அருள் ஸ்ரீ - - -

எழுதியவர் : ARULSHRI (15-May-14, 10:42 pm)
சேர்த்தது : ARULSHRI
Tanglish : paaratham
பார்வை : 430

மேலே