கற்பனை செய்
கற்பனை செய்
நான் மட்டும் இங்கு இல்லையென்றால்
உன் அளவில்லா கருணையை
வைத்து நீ என்னதான் செய்திருப்பாய்?
என்னால் தானே உனக்கு இத்தனை புகழ் !
முட்டாள்களில் முழுமுதல்வன் நானே.
மலையென கர்வம்,
குவிசெல்வமென பலவீனம்,
உணர்வுகளின் முழு அடிமை நான்தான் !
என்னை கண்டெடுத்த நீ
ரொம்ப அதிர்ஷ்டகாரன்.
தவற விட்டுவிடாதே என்னை !
குழப்பங்களின் பேரரசன், வாழ்வு சாவு... அதற்கும்தான்.
தீய கர்மாக்களின் புத்தகத்தில்
என் பெயர் தவறாமல் உண்டு.
மீண்டும் மீண்டும் பிறப்புகளில் சிக்கி
கருப்பை, பின்னுமொரு கருப்பை என
தவித்துத் திரியும்
என்னைப் போல் ஒருவனை
தலைகீழாய் நின்றாலும்
கண்டுவிடுவாயா
சிந்தித்துப் பார்!
கீழான என்னை காப்பதனால்
அகிலமெங்கும் உன் பெயர் ஓங்குது
உன்னைப் பாராட்டா மனிதரில்லை
என்னால் தானே இப்பரிசு உனக்கு
உன்னால் கிடைத்தது எனக்கு
வாழ்வேயல்லவோ!
எத்தனை பொருத்தம் நமக்குள் ?
மலைகளின் இறையே !
கொஞ்சம் கற்பனை செய்
நான் மட்டும் இங்கு இல்லையென்றால் !!
மூலம் - அன்னமையா (1424-1503)
ஆங்கில மொழியில் - டேவிட் ஷுல்மான், வேல்சேரு நாராயண ராவ்
தமிழில் - நேத்ரா
Imagine
Imagine that I wasn’t here
What would you do with your kindness?
You get a good name because of me.
I am number one among idiots,
A huge mountain of ego
Rich in weakness, in giving into my senses
You are lucky you found me.
Try not to lose me.
Imagine that I wasn’t here.
I am the emperor of confusion, of life and death
Listed in the book of bad karma
I wallow in births, womb after womb
Even if you try, could you find one like me?
Imagine that I wasn’t here
Think it over.
By saving someone so low,
You win praise all over the world
You get merit from me and
I get life out of you.
We are right for each other,
Lord of the Hills,
Imagine that I wasn’t here.
-Annamayya (1424-1503)
From ‘CLASSICAL TELUGU POETRY - AN ANTHOLOGY’
Edited & Translated By
Velcheru Narayana Rao & David Shulman