கிறுக்கல்-வித்யா
அழகே என் அழகே
உன் இமை மோதி
என் விழி தொலைத்தேனே.....
அடடா என்னிரவு
மரித்தே போனதடா.......
நீயிருக்கும் திசையெங்கும்
என் கால்கள் நீளுதடா.......
நீ சிரிக்கும்
ஜதி கேட்டு என்னுயிர்
மயங்குதடா...................
ஊருரைக்கும் கதையெல்லாம்
பொய்யென ஆனதடா......
உன் நிழல் தேடி
நடை போடும் நிஜம்
தினம் மருகுதடா..........
நீயில்லா நானடா
காணி நிலம் தானடா........!
நீயில்லா நானடா
காணி நிலம் தானடா.......
நீ வந்து சேர்ந்தால்
நாணி வருவேனடா............
லலலாலா லா ல லா.............
ஹ ஹ ஹா ஹா.....