அ

* விறகுகளைச் சுமந்து வந்த
ஆல மரம்
அம்மா.
* சிறகுகளை தானம் செய்த
தேவதை.
* காரிருள்,
நீ கைபிடித்து நின்றாள்..
நகர்ந்து வழிவிடும்.
* துப்பாக்கி ஏந்ததா
போராளி..
* என்னிடம் நீ
அடிக்கடி சொல்லும் பொய்..
"நான் அழலயே"
* கடவுள்கள் செய்ததாக கூறப்படும்,
அத்தனை அற்புதங்களையும்
நீ செய்து .. நான் பார்த்திருக்கிறேன்..
* நான் கண் திறந்தது
முதல்
இந்த கவித எழுதுறது வரைக்கும்
எல்லா மூலதனமும்
உன் வியர்வை தானம்மா