ஆலயம்
ஆலயம் !!!!!
ஆலயம் என்பது என்னவென்றால்
அது அருள்தரும் சமுதாயக் கூடம் என்பேன்
அர்ச்சகர் முதற்கொண்டு பக்தர் ஈறாய்
அனைவர்க்கும் அதிலே உரிமை உண்டு
அரசர்கள் ஆண்டனர் அந்த நாளில்
அவர் இறையிலி நிலங்களை எழுதி வைத்தார்
நித்திய பூசைக்கு ஒரு நிலமும்
பின் நித்தம் விளக்கேற்ற ஒருநிலமும்
விழாக்கள் எடுத்திட ஒரு நிலமும்
விருந்தோம்பளுக்கென்று ஒரு நிலமும்
மங்கள இசைக்கென்று ஒரு நிலமும்
மலர் தொடுப்பவருக்கு ஒரு நிலமும்
காவலாய் இருப்பவர்க் கொரு நிலமும்
காலணி பாற்பவர்க் கொரு நிலமும்
நான் மரை ஓதுவார்க் கொரு நிலமும்
நற்றமிழ் மரை ஓதிட ஒரு நிலமும் இத்தனை நபர்களை வாழவைத்து
எத்தனை காலமாய் இருக்குதிங்கே
இன்றைக்கு வந்தவர் சொல்வதற்க்கா
நீ இவ்வாலயம் பொய் என்று சொல்ல வந்தாய்
ஆலயம் என்பது என்னவென்று அறியாத மாந்தர்கள் பிதற்றுகிறார்
ஆலயம் என்பது புனிதமென்று
அறிந்தவர் அதை நாடி செல்லுகின்றார்
இந்திய மண்ணிலே பிறந்திருந்தால்
அவர் ஆலய நிந்தனை செய்யமாட்டார்
ஆலயம் என்பது என்னவென்றால்
அது என்றுமே சமுதாய கூடம் என்பேன்
-----அருள் ஸ்ரீ-----