மாரி நீ வாராயோ

மரமெனக்கு வாக்கபட்ட
மழையாளே நீ இன்று..

புகுந்தவீட்டு
மனிதர்களால்..

வாழாவெட்டியாக
போவேனா என்று..

உன் தாய் மடி
சாய்ந்து நொந்தகதை..

சொல்லிஅழ உந்தன்
வான்வீட்டில்..

போயிருக்கியே உன்
புகுந்த வீட்டில்...

நீ திரும்பி வரும்
நாள் எதுவோ...

நான் உனக்காய்
காத்திருக்கேன்...

உன் தஞ்சமின்றி
பட்டமரமாய்...

நீ வரமறுத்தால் நான்
தீக்குளித்து செத்திடுவேன்....

நான் போகும் நாளும் என்
விதையை விட்டுசெல்வேன்..

மறவாமல் நீயும் வந்து
நம் சேயை வளர்த்திடுவாய்..

உன்னை வெறுத்த
எந்தன் வீட்டாருக்கு...

உன் தயவின் தேவை
இன்று வந்ததறிவேன்..

என் கண்மணியே
கார்மேகம் பெற்ற மகளே..

மறவாமல் நீயும்
இங்கு வருவாயா...

உன் புகுந்த வீட்டை
செழிக்க வைக்க...

வருணன் படைத்த
என்னவளே வாராயோ...

வானவில்லில் பூ சூடி
பேரழகாய் சிரிப்பதற்கு...!!

...கவிபாரதி..

எழுதியவர் : கவிபாரதி (17-May-14, 1:41 am)
பார்வை : 83

மேலே