உன் பிரிவில் உருகும் என் இதயம் 555

என்னவளே...

விண்ணில் மிதக்கின்ற
மேகங்களை...

என் கைகளில்
ஏந்திய போது...

உன் விழியில்
நான் விழுந்து...

என் விழியில் நீ மிதப்பதை
நான் உணர்ந்தேனடி...

மழை நேரத்தில் வரும்
வானவில்லை...

காணும் போதெல்லாம்...

வானவில்லும்
பெண்ணென்று...

உன்னை அங்கு
ரசித்தேனடி...

நான் ரசித்த வானவில்
சில நிமிடங்களில் கரைந்தது...

உன் நினைவுகளை சுமந்த
என் இதயத்தால்...

உன் பிரிவை தாங்க
முடியாமல் கரையுதடி...

மெல்ல மெல்ல உருகும்
என் இதயம்...

நாளை முழுவதும்
மண்ணில் உருகுமடி...

மெழுகை போல...

அன்றேனும் உணர்வாய
என் காதலை நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-May-14, 9:45 pm)
பார்வை : 331

மேலே