ஈழம் மலரட்டும்
வீரம் வீரமென
விதைத்தது குருதியன்றோ?
முள்ளிவாய்க்களில்
நரிகள் கூட்டத்துள்
நம்பி ஏமாந்தவர்
நாம் தமிழினமே...!!
முதுகில் தூக்கி சுமந்து
முதலாளியாக்கிவிட்டோம்!
முதுகில் குத்திட
முதலையா நாம் வளர்த்தோம்!!
பாசமுடன் நாமிருக்க
மோசம் செய்ய துணிந்தானே?!!
வெறியென்ன இருந்திருந்தால்
பிஞ்சு இரத்தம் சுவைத்திருப்பான்!
பிணம்தின்னி கழுகை
பிள்ளையாக கருதியது
நாம் செய்த தவறோ ?
இரக்க குணத்தாலே
இறக்கமானோமோ?
இறந்தது நம்மினமே
இந்தியரும் வருந்தலேயே!!
பொறுத்து பொறுத்து தான்
புவியை தொலைத்தோமோ!!?
இரக்கம் நம் பிறப்பில் முளைத்ததால்
தயக்கம் வந்து தடுத்ததோ?!!
மாண்டவர் கோடிக்கோடி
மானமிழந்தவர்கள் நம்மங்கை
மன்னிக்கும் மனிதருக்கும்
நெஞ்சுபொருக்கா செயலன்றோ?!!
வெட்கி குனிந்தாலும்
விடாதே வீரனே !
கொத்தி தலைகொய்து
கொடிமரத்தில் தொங்கவிடு!
வக்கத்தவனாய் வந்தவனே
வாழும் வாழ்வை பறிக்கும் போது
வால் சுமந்து பிறந்த வீரா !
வீரத்தைக் கூட்டு மலரட்டும் ஈழம் !
(இன்று ஈழத்தில் இறந்த நம்மினத்திற்கு நினைவுநாள் தமிழனாயின் வெட்கி தலைகுனி மனிதனாயின் ஒருசொட்டு கண்ணீர் சிந்திட வேண்டுகிறேன் )