எம தர்ம ராஜாவின் எளிமையான தத்துவம்

சுற்றுலா செல்லலாம்
என நினைத்து
எம லோகத்திலிருந்து
பூலோகம் (சென்னை) கிளம்பினேன்===
பூலோகத்தை
சென்று அடைவதற்குள்
எம லோகத்திற்கு என்னை அனுப்பி விடும்
போல் உள்ளது சென்னையின்
சாலை போக்குவரத்து ===
பாச கயிற்றோடு
பறக்கும் வாகனங்கள் ===
கயிற்றின் வளையம்
என் மேல் வீசப்பட்டதால்
சுற்றுலாவை
சிறிய உலாவாக்கி
மருத்துவ மனைக்கு சென்றேன் .
அங்கு மற்றுமோர் கயிறு வீசப்பட்டது
தப்பி ஓடி காவலரிடம்
அடைக்கலம் சென்றேன்
உடலை சுற்றி வளயமிட்டார்கள்
அங்கிருந்தும் தப்பி ஓடி
ஒரு வீட்டில் புகுந்தேன்
கணவன் மனைவியின்
கடுமையான விவாதத்தால்
என் மேல் கயிற்றை வீசினார்கள்
தப்பி ஓடி எம லோகத்திற்கு திரும்ப எண்ணி
சென்ட்ரலில் ரயில் ஏறினேன்
ரயில் பெட்டியில் குண்டு வெடித்தது
அய்யொஹொ !!!!!!!
எம கண்டத்தில் கிளம்பி விட்டேனோ....
என யோசித்தேன் =====
நான் தான் எம தர்மராஜா
என மார் தட்டி கொண்டு இருந்தேன்===
பூலோகம் சென்ற பின் தான் தெரிய வந்தது
எனக்கு போட்டியாளாராக
பல பேர் இங்கு வளைய வருகின்றார்கள் என ===
பூலோக மக்களே!!!!!
என்னை பார்த்து பயப்படாதீர்கள்
நான் கூறுவது எல்லாம் ஒன்று தான்
உங்களுக்கு எமன் நீங்கள் தான் =====
கயிறு திரிப்பதும் நீங்கள் தான் !
கயிறு போடுவதும் நீங்கள் தான் !
சிந்தித்து செயல் படுங்கள் ======