வண்ண கோலம்
சிறுவயதில் விளையாட்டாய்
வேலை செய்கிறேனென
போட்டேன் சிறுகோலம்...
விதவிதமாய் போடவே
ஆசைகள் வந்தன
வளரிளம் பருவத்தில்...
நாளடைவில் அதில்
இருந்தே தொடங்கியது
என் இனிய நாட்கள்...
அடுத்த வீட்டு
தோழிக்கு தான்
வருத்தம் என்மேல்....
தினம் அவள்
அம்மா கோலம்
போட சொல்கிறார்களாம்....
நீ செய்கிறாய்
எனக்கு அல்லவா
வசை விழுகிறது....
வா தோழி!
நான் சேர்த்து
போடலாம் என்றேன்....
போடி! இது
எனக்கு சற்று
சிரமம் என்றாள்...
வண்ண வண்ண
கலவையிலே பல
வண்ணமலர் இடலாம்...
புதுப்புது சிந்தனையில்
பல வடிவங்கள்
கற்பனையில் தீட்டலாம்...
மனதில் தோன்றியதை
இட்டு நாம்
மகிழ்ச்சி கொள்ளலாம்...
நம்வீட்டு வாசல்
கோலம் பார்ப்போர்
களித்து செல்லலாம்...
வா தோழி!
நாம் சேர்ந்து
கோலம் இடலாம்....
இருவருமே இன்முகமாய்
இனியே இடுகிறோம்
நட்பு கோலம்.....
- வைஷ்ணவ தேவி