மாலை நேரத்து மயக்கம்
சிரித்திருந்த சூரியன் சிவத்து மறைய,
ஓடியாடிய முகிலினங்கள் ஒதுங்கி வழிவிட,
பறவைகளும், பராந்துகளும் வீ டு தேடிச் செல்ல,
நான் மட்டும் தனிமையில்,
தனீ மயிலாநேன்.
வெளுத்திருந்த வானம் கறுத்து போக,
வெண்திரையை அகற்றி முகம் காட்ட,
மது அருந்தாமல் போதைக்குள்ளானேன்.!
அந்திவேலையில்,
வீற்றிருந்த மணற்பரப்பின் சூடு தணிய,
"மாலை நேரத்து மயக்கத்தில்",
விண்ணில் பௌர்ணமி எணும் பெயரில்
அவள் முழுமையான உருவம்பெற்றாள் ..!