என் அந்த நாள்20 மே
அதே........
இரவு... நிலவு.. ,
உறவு.. ,
குளிர்... உயிர்... ,
அதே தென்றல் , இன்பம் ,
அணைப்பு , நினைப்பு ,
சின்ன இடைவெளியுமற்ற
கன்னங்கள் இரண்டின் நெருக்கம்..,
அதே உணவு...உணர்வு...,
அதே தாய்க் குணம் உனது... ,
அதே நாய்க் குணம் எனது...
இன்னமும் ,
பொறுமையின் பீடத்தில் நீ..
அவசர அரியாசனத்தில் நான்...,
இன்னமும் என்ன வேண்டும்...?
அதே தீண்டல்.. சீண்டல்..,
அதே ஊடல்...தேடல்..,
சாடல்,,
விட்டுக் கொடுத்தல்..தொட்டுப் பார்த்தல்..
இன்னமும் என்ன வேண்டும்..??
உனது மடியில் எனது உயிரும்
எனது மடியில் உனது உயிரும்..
ஒரு நொடியில் மறையும் மாயமும்
தவிர.....
என்னவளே..
இன்று அந்த நாள்....!
வாழ்த்துகள்...