அருகில் அவள் வாசம்
கண்பார்த்து பேசித்திரிந்தேன்
புன்முறுவலின் வரிகள் ரசிக்க..
வரிகளில் தவழ்ந்து வந்த
வார்த்தைகள்.
வந்து தென்றலாய் வாசம் செய்தது..
தூரமிருந்து ரசிக்க
பிரியப்படவில்லை..
அருகில் இருந்தால் மட்டுமே
அலையடிக்கும் அவள் கண்கள்
அவத்தைக் குள்ளாக்குமென
அவளின் சொல்லாடல்கள்
எனை செவிடாக்கவில்லை
மாறாக ஊமை செய்துவிடுகிறது..