தள்ளி நின்ற உறவுகள்
வாழ்க்கை ஓட்டத்தில்
நான் காலிடறி
விழுந்தபோது
கை கொடுக்க யாருமில்லை
கை கொட்டி சிரித்த
உறவுகள் யாவும்
கண் மறைய சென்றது....!
காலைச் சுற்றும்
பாம்பாகி விடுவேனோ
என்று நடுங்கி ஒளிந்தது!
உமிழ் நீர்
உமிழும் உறவுகள் முன்னே
விழ் நீர் மல்கி
வீழ்ந்து எழுந்து
எழுந்து வீழ்ந்து
போராடி போராடி
போராட்டமே சலித்தது
என் வெறிகொண்ட
முயற்சிக் கண்டு.....
தோல்வி செடியில்
துணிச்சல் உரம் போட்டு
வியர்வை நீர் பாய்ச்சி
வெற்றி கனி பறித்தபோது ்
ஓடி ஓடி ஒளிந்த சொந்தம்
தேடி தேடி வந்தது
உதட்டில் சிரிப்பை வைத்தே
உறவாட முயன்றது
அப்போவே தெரியும்
நீ நிச்சயம் ஜெயிப்பாய் என்று
வெட்கம் சிரிதுமின்றி
வாழ்த்து மடல் படித்த போது
ஆறிய ரணங்களில்
மீண்டும் ரத்தம் கசிந்தது...்