சொல்லிவிட்டேன்

என் இரு விழிகளுக்கு
அப்போதே சொல்லிவிட்டேன்
உன்னை மட்டும் பார்த்தால் போதுமென்று.

என் இதழ்களுக்கும்
சொல்லிவிட்டேன்
உன் பெயர் உச்சரித்தால் போதுமென்று.

என் கரங்களுக்கும் தெரியும்
உன்னை மட்டும் தழுவினால் போதுமென்று.

என் இதயத்திற்கு
அன்றே தகவல் போய்விட்டது
உன்னை மட்டும் நினைத்தால் போதுமென்று.

என் கால்களுக்கும் சொல்லிவிட்டேன்
உன் ஊர் வரை வந்தால் போதுமென்று.

ஆனால் இன்றுவரை
ஏனோ
உன்னிடம் மட்டும்
சொல்லவே முடிந்ததில்லை
நீதான் என் காதலன் என்று!

எழுதியவர் : நேத்ரா (20-May-14, 6:45 pm)
Tanglish : sollivitten
பார்வை : 124

மேலே