வெட்டுக்கிளி 3

பறந்து வந்து அமர்ந்த வெட்டுக்கிளியை பார்த்துகொண்டிருந்தேன்.
அதன் நிறம் பசுமையை நினைவூட்டியது,
அதற்க்கு மூன்று இணை கால்கள் இருந்தது,
மூன்றாவது இணை கால்கள் நீண்டு,பெரிதாக இருந்தது,அதன் இறக்கையும் பச்சை நிறத்தில் இருந்தது.
சிறிய தலையும்,சிறிது நீண்ட உடலும் கொண்டிருந்தது .அது பார்க்க அழகாக இருந்தது,அதே சமயம் அது ஒரு பூச்சி என்பதால் கடித்துவிடுமோ என்று சிறிது பயமாகவும் இருந்தது.

அனு அந்த வெட்டுக்கிளியிடம் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என கேள் என்று என் அக்கா கூறினார்
எதக்கு என்று கேட்டேன்.
நீ கேளு என்று கூறினார் .
வெட்டுக்கிளியை பார்த்து ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்டேன்.

வெட்டுக்கிளி என்னை பார்த்தபடியே அதன் வலது பக்க முன் கால்லை உயர்த்தியது.
அங்கே பார்த்தியா நீ ஏரியில் எவ்வளவு நீர் இருக்கு என்று கேட்டதற்கு,அது ஏரியில் அந்த அளவுக்கு நீர் உள்ளது என அதன் கால்களை உயர்த்திகாட்டுகிறது என்று அக்கா கூறினார்.

எனக்கு மிகவும் அச்சிர்யமாக இருந்தது.
இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு அக்கா வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
நான் வெட்டுக்கிளி அருகே முட்டிக்காலிட்டு அமர்து மீண்டும் ஏரியில் எவ்வளவு நீர் உள்ளது என்று கேட்டேன்.
அது மீண்டும் அதன் கால்லை உயர்த்தி கூறியது.
எனக்கு அந்த வெட்டுக்கிளியை மிகவும் பிடித்தது.

வெட்டுக்கிளியை பார்த்து உன்னை எனக்கு பிடித்துள்ளது என்னுடன் வருகிறாயா,நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன்.உனக்கு தினமும் உணவு தருகிறேன் என்று கூறினேன்.

அது என்னையே பார்த்தப்படி அமர்ந்திருந்தது,அதன் உடலில் எந்த ஒரு அசைவுமில்லை.
என்னை உனக்கு பிடிக்கவில்லையா என்னுடன் வரமாடாய என்று கேட்டேன்.
வெட்டுக்கிளி தாவி குதித்து என் கண்ணத்தில் அமர்ந்தது.
பயத்தில் வேகமாக கத்தினேன்,
நான் கத்தியதும் மீண்டும் வெட்டுக்கிளி தாவி குதித்து தரையில் அமர்ந்தது.

என்ன ஆச்சு அனு என்று கேட்டு என் அக்கா ஓடிவந்தார் .
வெட்டுக்கிளியை காட்டி அது என்னை கடித்து விட்டது என்று கூறினேன்.
அந்த வெட்டுக்கிளி என்னை பார்த்தபடியே இல்லை என்பது போல வலது புறமும்,இடது புறமும் அதன் தலையை ஆட்டிவிட்டு தலையை தொக்கபோட்டுகொண்டது.
எனக்கு அச்சிர்யமாக இருந்தது,நான் அதையே பார்த்துகொண்டிருந்தேன்.
அனு நிஜம்மா சொல்லு அது உன்னை கடித்தத என்று அக்கா கேட்டார்.
இல்லை அது என் மீது தாவியது என்று கூறினேன்.
அது அப்படிதான் தாவிக்கொண்டே இருக்கும் அது யாரையும் கடிக்காது என்று அக்கா கூறி என்னை அக்கிருந்து அழைத்து சென்றுவிட்டார்.

விட்டுக்குள் சென்றதும் ஆட்டோ வரும் சத்தம் கேட்டது.
எட்டிப்பார்த்தேன் ஸ்கூல் ஆட்டோ நின்று கொண்டிருந்தது.
நானும்,என் அண்ணனும் கீழே இறக்கி சென்று ஆட்டோவில் ஏறினோம்.
புத்தக பையையும்,சாப்பாட்டு பையையும் ஆட்டோவில் வைத்துவிட்டு இதோ வந்துவிடுகிறேன் என்று கூறிவிட்டு வேகமாக வெட்டுக்கிளி இருந்த இடத்தை நோக்கி ஓடினேன்.
ஆட்டோவில் இருந்த அனைவரும் எங்கே போகிறாய் என்று கத்தினார்கள்.
.
அதன் அருகே சென்று என்னை மனித்துவிடு, நீ என்னை கடிக்க பார்த்தாய் என்று தவறாக புரிந்துக் கொண்டேன் பள்ளிக்கு நேரம் ஆகிறது,இன்னைக்கு அரைநாள்தான் பள்ளி "2"மணிக்கு வந்துவிடுவேன் நீ இங்கேயே இருக்கிறாயா,இங்கேயே இரு என்று கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டேன்.

பள்ளிக்கு சென்றும் என் நினைவு முழுவதும் வெட்டுக்கிளியின் மீதே இருந்தது,
அது என்னை கடித்துவிட்டது என்று கூறியதும் இல்லை என்பது போல தலையை அசைத்தது மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.
வெட்டுக்கிளி அக்கே இருக்குமா?இல்லை போய் இருக்குமா?அது எப்படி ஒரு பூச்சு ஐந்து மணிநேரம் ஒரே இடத்தில் நாம் கூறியதற்காக இருக்கும்,அது போய் இருக்கும் என்று யோசித்து கொண்டிருந்தேன்.

மணி 1 ஆனதும். கடைசி மணி அடித்தது.பள்ளி மைதானதிற்கு வந்ததும் ஆட்டோ நின்றுகொண்டிருந்தது.அதன் பிறகு அனைவரும் வந்து ஆட்டோ விட்டுக்கு வர மணி "2" ஆனது.


தொடரும்...

எழுதியவர் : அனுரஞ்சனி (20-May-14, 8:40 pm)
பார்வை : 229

மேலே