நிழலைத் தேடி சென்ரியு

துளி மழையில்லை
மின் விளக்கில்லை
வெறுப்பில் தெரு நாய்கள்.
*
வெயில் புழுக்கம் அனல்
நிழலைத் தேடி வெளியில் வந்தன
பயமுறுத்தும் பூரான்கள்.
*
தென்னம் பிஞ்சுகளைத் தொட்டு
விளையாடி ஓலை நிழலில்
திரிகின்றன அணில்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (21-May-14, 9:15 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 86

மேலே