விழி பார்வை

உன் விழி பார்வையும் என் மனதோடு
தான் பல மொழி பேசி மகிழ்ந்திடும்

உன் வளையோசையும் என் காதோடு
தான், இனிய சங்கீதம் பாடிடும்

உன் கால் சலங்கையும், என்
பேச்சோடு இணைந்து ஜதி சேர்க்க
துடித்திடும்

உன் முந்தானையும் காற்றோடு
பறந்து, என் மார்பினை தழுவிடும்

உன் சுவாசங்கள் அனைத்தும்
என் மூச்சோடு கலந்து இதயத்தில்
நுழைந்திடும்

இதற்காக தானே வாழ்ந்திருந்தேன்
நானும், உனக்காக தானே
எதிர்பார்த்திருந்தேன் நாளும்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-May-14, 7:05 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : vayili parvai
பார்வை : 120

மேலே