மணவாளன்

மாடத்திலே குத்து விளக்கெரிய
என் கூடத்திலே நிழல் கொஞ்சம் தெரிய
மனதினிலே நிம்மதி நிழலாட
மங்கை நான் அமர்ந்து பூக்கள் தொடுத்தேனே
என் மணாளன் நலனுக்காக பூஜித்தேனே
மன்னவன் சென்றான் காலையிலே
மாலை நேரம் நெருங்கியும் இன்னும் காணவில்லையே
என்னவன் முகம் காணாமல் எனக்கிங்கு இருப்பு கொள்ளவில்லையே
இதயத்திலே அவனை வைத்து, இதழினிலே இறைவன் நாமம் சொல்லி
விழிகளையே வாசலில் வைத்து தவமிருந்தேனே

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-May-14, 7:50 am)
சேர்த்தது : nimminimmi
Tanglish : manavaalan
பார்வை : 47

மேலே