தேர்ச்சி சதவீதம்

தேர்ச்சி சதவீதம் மிகக் குறைவாக இருந்த காலத்தில் தாகூர், மகாத்மா காந்தி, நேரு அம்பேத்கார் ராஜாஜி டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்ற மாமேதைகள் இருந்தார்கள். இன்று தேர்ச்சி சதவீதம் விண்ணைத் தொடும் அளவுக்கு கூடியுள்ளது. இவர்களில் எத்தனை பேர் மேதைகளாகப் போகிறார்கள்.

மதிப்பெண்களை அள்ளிக் குவிக்கும் மனித இயந்திரங்களை உருவாக்குவதில் கல்வி நிலையங்க்களுக்கிகிடையே கடும் போட்டி. மனித நேயம் தவிர்த்து அதிகச் சம்பளம் கிடைக்கும் வேலைக்குத்தான் மரியாதை அதிகம். தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க கல்வித் தரம் குறைகிறது என்பதை கல்வியாளர்களும் ஆசிரியர்களும் உணர்வதில்லை.

தற்போதே எழுதப் படிக்கத் தெரிந்த பட்டதாரிகளின் எண்ணிக்கை சற்று அதிகம். எழுத்துப் பிழை தவிர்த்து எழுதும் முதுகலைப் பட்டதாரிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. எனவே தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பதைவிட கல்வித் தரத்தை உயர்த்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும்.

(இன்று வெளியிடப்பட்ட 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவு அதிர்ச்சி ஆச்சரியம் இரண்டையும் அளிக்கிறது. 499/500 என்பதை 500/500 என்றே கொடுத்திருக்கலாம். என்ன கேட்டுவிடப் போகிறது. மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறைக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். அப்போது தான் கல்வி நல்ல மனிதர்களையும் மாமேதைகளையும் உருவாக்கும்)

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (23-May-14, 3:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 186

மேலே