ஒரு பதிவு

(ஒரு ஆண் இதுவரை பார்த்து பழகிய பெண்ணை முதல் முதலாக சேலையில் பார்க்கிறான் அப்போது தன் கற்பனையில் இருந்தவள் இவள் என்ற பூரிப்பில் காதல் வயப்படுகிறான் அப்போது அந்த நொடியில் இருந்து அவன் ஏக்கமும் தவிப்பும் ஒரு பதிவு.)


விண்ணிலிருந்து வந்தாளோ
என் கண்ணை பரித்துப்போற
நேற்றுவரை இல்லாத
உணர்வால் என்னை மயக்கி போற
எட்டிவைத்து
நடை பழகும் நிலவா? இல்லை
சேலையில் மலர்ந்த பூவா?
யார் இவள் ?
தடையின்றி
என்னை முழுசா விரட்டியாடிசிட்டா
ஓசையின்றி வெரசா
என்னக்குள் புகுந்துடா
மழையே அடிச்சாலும்
வெயிலும் சுட்டாலும்
என் நிழலையும்
அவள் துணையாகிட்ட.
ஒவ்வொரு
நிமிச்சதிலும்
இது நிஜம்தானென்று
என்னை கடந்து போகையிலே நிருபிச்சுட்ட ..

வானத்துக்கும், பூமிக்கும்
தூரம் குறைஞ்சிடுச்சி
அடிபாவி
உன்னால இந்த தூக்கத்துக்கும்
நாளும் நடக்குது கண்ணாமூச்சி.

உன்னோடு மட்டும் பேச
என் வார்த்தைகள் தவம் கிடக்க
நீ
பார்த்து பாக்காம போகைல
பூ மீது தொடுத்த சாட்டையா
அது என் நெஞ்ச பதம்பார்க்குது..

சொல்லலாமா?
வேணாமா? -என்ற
தவிப்பிலே நேரம் என்ன கொல்லுது

சொல்லி மறுத்துட்டா?
என்ற பயத்தின் சூட்டிலே
கொஞ்சம் முளைத்த
தைரியமோ - கருகி போகுது.

உன்ன பூவுன்னு நெருங்கமுடியல
நெருப்புன்னு தள்ளி இருக்கமுடியல
தண்ணிர பிரிஞ்ச மீனாட்டும்
ஏன்டி துடிக்க வைக்கிற.

எத்தனயோ ? காகிதங்கள்
உன் பேர சுமந்து
உன்னை சேராம
செத்துப்போசின்னு தெரியுமா.
அத்தனையும்
காதல் சாம்ப்ராஜியத்தின்
போராளிகள் என்பதும் புரியுமா?

ஒரு முறை
ஒரே முறை
நீ நானாக
மாறிப்போ.
நீ கொடுத்த
அந்த தனிமை உலகத்தில்
கலந்துபோ.

தடுமாறுவாய்
தடமாறி பயணிப்பாய்
திக்கு தேச தெரியாம
தாகத்தில்
தனியா தவித்து
தள்ளாடுவாய்.

இது மட்டும்தானா.
உன் போன்ற பெண்ணை
பார்த்தா
நீயும்
சுடுகின்ற நிலவை பார்ப்பாய்
நித்தமும்
மீளாத சுழலில் மாட்டிக்கொள்வாய்.
என்னை போல்.

எழுதியவர் : Maheswaran (23-May-14, 8:03 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : oru pathivu
பார்வை : 114

மேலே