ஏழை தொழிலாளிகள்

இரைக்காக
கரையும்
காக்கையின் சாதி....
வறுமை கோட்டிற்கு
மேலும் கீழுமாய்
எங்கள் வாயிற்று பிழைப்பு....
ஆசைகள் அதிகம்
கனவுகள் அதிகம் ஆனால்
வயிற்றுக்கு தேடியே
எங்கள் வாழ்க்கை முடிகிறது....
கோபுரகள் பல கட்டினாலும்
குடிசையில்தான் எங்கள் வாழ்க்கை....
முதலாளித்துவம் ஓங்கி நிற்க
தொழிலாளி வேசம்
எங்கள் வாழ்க்கை முழுவதும்....
யாருக்காகவோ உழைக்கிறோம்
யாரென்றுகூட தெரியவில்லை
எங்கள் உழைப்பு மட்டும்
மாத மாதம் அவர்களின் வங்கி கணக்கை நிரப்பிய படி....
செங்கல் சுமந்து
மணல் சிமென்ட் கலந்து
வண்ணங்கள் தீட்டி
எங்களால் உயிர் பெரும் கட்டடங்கள்
உயிர் பெற்று ஆடம்பர மின் விளக்கில்
மின்னி கொண்டிருக்கையில் உள்ளே
எங்களுக்கு அனுமதி கிடையாது....
சாக்கடையில் முழ்கி
வாழ்க்கையெனும்
முத்தை தேடுகிறோம்....
நகரத்து சாலைகள் கூட அழகுதான்
நரகமான எங்களின் வாழ்க்கையை விட...
வறண்ட நிலமாய்
விவசாயின் வாழ்கை
வானத்தையே நம்பியிருகிறது.....
மழையும்
அரசியல் வாதிகளும்
ஒரே கூட்டணியில்
எப்போவது ஒருமுறை மட்டுமே
இவர்களின் வருகை....
எங்களின் உழைப்பில் விளைந்தவைக்கு
எவனோ விலை வைக்கிறான்
எங்கள் வாழ்க்கை
பத்திரங்களோடு கிராம வங்கியில்....
உழைத்து உழைத்து
கைரேகையோடு எங்கள்
ஆயுள்ரேகையும் அழிந்துகொண்டிருகிறது....
பிறருக்கு
உழைப்பு எந்திரமாய்
எங்கள் வாழ்க்கை
வாய்க்கும் வயிறுக்கும் இடையே
பொதுவுடைமை சிறைபட்டு கிடக்கிறது...
எங்களின் தலைஎழுத்தை
எழுதியவன் யாரோ
அவனுக்கு ஒரு தலைஎழுத்து
எங்களின் புலம்பலை தினம் கேட்க வேண்டுமென்று....
முதலாளிதுவம் முடிவில்
பொதுவுடைமை சித்தாந்தம்
ஏட்டோடு இல்லாமல்
நாடாளும் வரை
எங்களின் வாழ்க்கை
கேள்விக்குறியாய்
வளைந்த எங்கள் முதுகெலும்பை போல்....