இவனிலை என்று மாறும்

எட்டாப் பணத்துக்காய்
தட்டை தட்டி
சட்டை செய்யா
பிறவிடம்
மனத்தை வென்று
பணத்தை வாங்கும்
பிச்சையவன்

இருப்பிடம் இல்லா
ஜீவன் அவன்
எங்கும் எல்லாம்
அவன் தங்குமிடம்
எதிர்காலம்
என்றொரு காலம்
அவன் விதியில்
இல்லா பிறவியவன்

அவன் சொத்து
அவன் குறையாகும்
அதுவே அவனின்
முதலுமாகும்

மானம் ரோசம்
மறைத்தவனாய்
வெட்கம் நாணம்
விட்டவனாய்
எட்டணா நாலணா
பணத்துக்காய்
தன்னை மடித்து
தாழ்படிவான்

ஏச்சும் பேச்சும்
இவன் பெறுவான்
இயலாமை அவன்தான்
என் செய்வான்
ஏக்கம் பல இருந்திடினும்
அணைப்பான்
இயலாமை அதனால்

தந்தவர் பலரை
புகழ்ந்திடுவான்
தறாதவர் சிலரை
வெறுத்திடுவான்
நாட்கள் பல சென்றிடினும்
அவனிலை என்றும்
மாறாது!

பிச்சை எடுத்தவர்
வாழ்ந்ததில்லை
பிச்சை எனும் பெயர்
மறைந்ததில்லை!
நிறந்தரமில்லா இத்தொழிலை
ஏனோ சில பேர் விடுவதில்லை

எழுதியவர் : ஜவ்ஹர் (24-May-14, 10:40 pm)
பார்வை : 279

மேலே