சொல்லிடவா என் கதையை

... சொல்லி(ட)வா என் கதையை ""...

கடல் தாண்டி வாழ்ந்தாலும் என்
கல்புக்குள்ளே நிறைந்திருப்பாய்
காற்றாய் என்னுயிர் சுவசமென்று
காதலென நினைத்துக்கொண்டால்
கருத்திங்கு பிழையாகிப்போய்விடும்
கதையே கருவாகி சிறு கதைசொல்ல
துன்பமே சின்ன சோகம் சுனையாய்
வற்றாது ஊற்றைப்போல் எந்தன்
கண்ணோடு நீர் வழிய தமிழோடு
கவிசுவை சேர்த்து புதுப்பாட்டு பாட
சொல்லாத என்னுள்ள சோகங்களை
வலியாலே வரிகோர்த்து புதிதாய்
சொல்லேடுத்து தான் பாடவந்தேன்
படிப்பவர் பார்க்கின்றார் பரிகாசமே
செய்கின்றார் படைப்பின் உண்மை
நோக்கம் பார்க்கவே மறுத்துவிட்டு
பார்வைக்கு சிறு திரையிட்டு ஏனோ
ஒற்றை பக்கமேதான் பார்க்கின்றார்
பட்டதையே நான் சொல்வதினால்
இன்னும் மறக்கவில்லை என்றிடுவர்
மறந்திடத்தான் முடிந்திடுமா எந்தன்
மனமிங்கு பட்டுவிட்ட வேதனையை
பட்டவனுக்குத்தான் தெரியுமவன்
புண்மனம் அதை வேடிக்கையாய்
பார்ப்பவனுக்குகோ சந்தன மணம்
உரக்கவே சொன்னாலும் திரையிட்டு
மறைத்தாலும் உண்மையிதுவென்று
உலகமே பொய்யாக நினைத்தாலும்
உண்மை இதுவென்று என்னுயிர்
சுமந்த உன்னாளே அதை எத்துனை
காலம்தான் ம(றை)றுக்க முடியும்
என்னிடம் கேட்டதுபோல் ஒருநாள்
அவர்கள் உன்னிடமும் கேட்ப்பார்கள்
அப்போதேனும் நீ உண்மை சொல்
உன்னை என்றோ மன்னித்துவிட்டேன்
என்னன்னை தந்த நல்குணமிருப்பதால்
மறுத்துவிட்டு மமதையை மதிகெட்டு
திரிந்தாலும் நாம் மறுமை ஒருநாள்
மகுஷரிலே நிற்கும்போது நடித்திடவும்
எதையும் நாம் மறைதிடவும் முடியாது

என் பிள்ளைகளே உங்களுக்காய் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

கல்பு = உள்ளம்
மகுஷர் = இறுதி தீர்ப்பு நாள்


அவள் பொய்யாய் ஊருக்குள்
ஒப்பாரிவைதாள் உண்மைக்காய்
நான் ஊடகத்தை கையிலெடுத்தேன் ....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (25-May-14, 1:56 am)
பார்வை : 157

மேலே