என் ஆசைக்கு தடை ஏன்
வீசும் குளிர் காற்றுக்கு
உன்னை தொட்டுதழுவும் ஆசை...
முழங்கும் இடிக்கு உன்
செவியில் நுழையும் ஆசை...
வெட்டும் மின்னலுக்கு உன்
முகம் கானும் ஆசை...
கொட்டும் மழைக்கு உன்னை
கட்டி தழுவும் ஆசை...
என்னவளே...
எனக்கான விருப்பமும் இதுதானே...
அப்படி
என்ன வேறுபாட்டை கண்டதால்
எனக்கு தடை விதித்து
மழையோடு மட்டும் மழலையானாய்...