விடமாட்டேன் சிந்திக்காமல் சிரிப்பவனை
பிறப்பதும் ஒரு முறை! இறப்பதும் ஒரு முறை!
பிறப்பும் நாமறியோம்!இறப்பும் நாமறியோம்! இடையில்தான் ஆர்ப்பரிப்பு எத்தனையோ?
இன்பம் பிறக்கும்போது, துன்பமும் பிறக்கிறது
நன்மை பிறந்தபோது, துன்பமும் பிறந்தது
நாகரிகம் பிறந்தபோது,அநாகரிகமும் பிறந்தது தர்மம் பிறந்தபோது,அதர்மமும் பிறந்தது
இது தவறென்றால்,ஆம்!என்போம்
மாற்ற, இணைந்தால் என்ன? வினவினால்
தன்னிறைவு பெற்றுவிட்டோம் நாம் என்போம் மீறி அதை மாற்ற முயன்றால்!சிரிக்கின்றாய்!
சிரித்தவன் சிந்தித்தால் உண்மை தோன்றும் உண்மையை உணர்த்தவேயான் உரைக்கின்றேன்
பிறப்பும் ஒருமுறையே ,இறப்பும் ஒருமுறையே
நன்மையென்ற ஒன்று நிலைபெற.....
எல்லோரும் சமம் என்ற நிலை மலரவேண்டும்.
அதுதான் முடிவென்றபின் நான் ....
விடமாட்டேன் சிந்திக்காமல் சிரிப்பவனை.