வாப்பா ராஜபக்சே --- ✿ சந்தோஷ் ✿

ஏலே பக்சே பக்சே ராசபக்சே
செவப்பு கம்பளம் போட்டு
ராசமரியாதை கொடுக்க
மோசடிக்காரர் முடிவு செஞ்சாச்சு!

வேணாம் வேணாம்
உன்ன கூப்பிட வேணாமுன்னு
கூப்பாடு போட்ட
எங்க ஆர்ப்பாட்டமெல்லாம்
நாசமா போயிடுச்சு
எங்க கோரிக்கை மனுயெல்லாம்
தாமரை கட்சி ஆபிஸ்
கழிப்பறை கழிவா போயிடுச்சு.!

ஈழத்துல ரத்த ஆறு
ஓடினாலும் தமிழன்னுக்கு
கவலை ஒன்னுமில்ல

பாலாறு ஒடுது பாரு
சினிமாக்காரன் கட் அவுட்க்கு
பாலாபிஷேகம் நடக்குது பாரு..!

இவிங்க இன உணர்ச்சி எல்லாம்
இருநூறு ரூபாய் நோட்டுல தள்ளாடுது - நீ
இளிச்சுக்கிட்டு இந்தியா வந்து சேரு...!
இடிஞ்சிப்போகாம நாங்க சிரிப்போம் பாரு.!

எண்ட தமிழுக்காரங்க
தறுதலைக் குடிக்காரங்க..!

காந்தி நோட்டு நீட்டினா
செத்த பிணத்தையும்
பிரதம மந்திரி ஆக்கிடுவாங்க...!

இலவசமுன்னு சொல்லி
நீ காறித்துப்பினாலும்
கொலைக்காரன் உன்னையும்
இந்திய சனாதிபதி ஆக்கிடுவாங்க..!


யப்பா யப்பா
ராசபக்சே காட்டேரியப்பா...!
வாப்பா வாப்பா
வாழ்க்கை ஒரு வட்டமப்பா
அரசன் நீ கொன்னுட்டுப்பா....!
எங்க ஈழத்து ஆண்டவன்
கரிகாலன் மீண்டும் பிறப்பானப்பா
உனக்கு ஒரு சாவுமணி
அவன் அடிப்பான். இது சத்தியமப்பா.!

யப்பா யப்பா
ராசபக்சே காட்டேரியப்பா...!
வாப்பா வாப்பா
மோசடிக்கார பய
பதவியேற்பு கருமாதி நிகழ்ச்சி
சீரும் சிறப்பா நடக்கட்டுமப்பா..!

அதோ பாரப்பா..! பாரப்பா..!
இந்த தேசத்துல
உன் காத்து பட்டவுடனே..
எங்க தேசக்கொடியும்
கூனி குறுகி
தலைகீழா பறக்கிறதுதப்பா..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (25-May-14, 9:37 pm)
பார்வை : 196

மேலே