நீரில் அலையும் மீன்கள் ஹைக்கூ

*
நேரம் தவறாமல் தினமும்
வணங்குகிறது சூரியனை
சூரிய காந்திப் பூ.
*
தன் நிழலை நீரில்
தானே பார்க்fகிறது
தாமரைப் பூ.

*
வண்ணங்களால் அழகு செய்து
பெண்களை ஈர்க்கிறது
மருதாணி.

*
நீரைத் தூய்மை செய்கிறது
அழுக்கைத் தின்று
நீரில் அலையும் மீன்கள்.

*
திருமண மேடையை பளிச்சென
அழகு செய்கிறது
காகிதப் பூக்கள்.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (26-May-14, 11:45 am)
பார்வை : 175

மேலே