விடியலை நோக்கி
என் வீட்டு குக்கூ குருவி
எப்போதும் விடியலை நோக்கியே
எட்டி பார்த்து கொண்டிருக்கிறது.
பாவம்! அதற்கு தெரியாது
எப்போதும் இந்த அறைக்குள்
விடியலே வராதென்று !!!
(குறிப்பு : குக்கூ குருவி என்பது குக்கூ கடிகாரத்தில் உள்ள குருவி.
இப்போது மாநகரில் உள்ள பல வீடுகளில் சூரிய வெளிச்சம் என்பதே அரிதான ஒன்றாகிவிட்டது )