மாற்றம்
காலம் மாறினால்
காட்சிகள் மாறலாம்.
கம்பன் மாறினால்
கவிதைகள் மாறலாம்.
கண்கள் மாறினால்
கனவுகள் கூட மாறலாம்.
உரிமைகள் மாறினால்
உறவுகள் மாறலாம்.
உதடுகள் மாறினால்
உண்மைகள் மாறலாம்.
உதிரங்கள் மாறினால்
உயிர் கூட மாறலாம்.
இவையனைத்தும் மாறினால்
இவ்வுலகமே மாறலாம்.
இவ்வையகத்தில் மாறாதது
இனிமையான காதல் மட்டுமே.