பெற்றோர்க்குச் சொல்ல வந்தேன்
ஒன்றுசொல்லத் தோன்றியதால்
... உரைக்க வந்தேங்க
நன்றுஎன்றே தோன்றியதால்
... நவில வந்தேங்க
வென்றுவாழும் வாழ்கையது
... தேர்வி லில்லைங்க
வெள்ளைத்தாள் மதிப்பெண்வெறும்
... பார்வை தானுங்க
தேர்வெழுதித் தோற்பதொன்றும்
... தீர்வு இல்லைங்க
தெரிந்துகொண்ட அனுபவமே
... தொடர்ந்து வெல்லுங்க
தோற்றதனால் பிள்ளைகளை
... வெறுப்ப தேனுங்க
தோள்கொடுத்து ஊக்கமதை
... ஊட்டிப் பாருங்க
மறுபடியும் கிளைத்தெழவே
... மலர்சி யூட்டுங்க
மனமுணர்ந்த மக்களிடம்
... மாற்றம் காணுங்க
கனமதிப்பெண் பெற்றவரும்
... வீழ்ந்த கதையுண்டு
குறைமதிப்பெண் பெற்றபலர்
... வாழ்ந்த கதையுண்டு
மதிப்பெணொன்றே வாழ்வுயர்த்த
... மாயை யும்இல்லை
மதிப்பெணற்ற காரணமாய்
... மறைவ தும்இல்லை
எத்தனையோ சாதனைகள்
... பாக்கி இருக்குங்க
இன்றுசின்னத் தோல்விக்காக
... இறுக்க மேனுங்க
இன்றிழந்தால் இன்னுமுண்டு
... தேர்வு வாய்ப்புங்க
இப்படித்தான் வாழ்கையென்று
... எழுந்து காட்டுங்க
முன்கோபம் வெறுமுணர்வே
... மூட்டை கட்டுங்க
முயர்சியினால் முட்டிஎழும்
... விதையைக் காட்டுங்க
சாதனையின் கதவுகளைச்
... சாத்தி டாதீங்க
சரித்திரமாய் வாழவழி
... காட்டி நில்லுங்க !
... மீ.மணிகண்டன்