கடல் தாயே
கருணை கொண்டிருந்த நீ
ஏன் கலங்கபட்டுக் கொண்டிருக்கிறாய்
பூமியின் பெரும் ஆதாரமானவளே
நீ பொங்கி எழக் காரணமென்ன ?
ஆசையாய் உந்தன் மடியில்
அன்பாய் தவழ்ந்தவர்களை
எத்தனை முறைதான் அபகரித்துக்கொள்வாயோ
ஆசை அலையால் ......
பிஞ்சு முகங்களைக்கூட
பிரித்து பார்க்க முடியாதவளே
உன் பேராசைக்கு
காரணமென்ன ........
எல்லைகளை மீறுவது
உனக்கு வேண்டுமானால்
எதார்த்தமாய் போகலாம்
இழப்புகளை சந்திப்பவர்க்கு .........
நாளுக்கு நாள்
உலக பரப்பளவில்
உன்னுடையதுதான்
நீண்டுகொண்டிருக்கிறது ........
வரலாற்று நகரங்களை எல்லாம்
வரலாறு இல்லாமல் ஆகிவிட்டாய்
கடல்நீரால் கண்ணீர் தான்
இங்கு கரைபுரண்டோடி கொண்டிருக்கிறது .....
உனக்குள் இல்லாத பொக்கிஷங்களா
நிலத்தில் நிரம்பிக்கிடக்கிறது
உயிர்களை பறிப்பது
உமக்கு விளையாட்டாய் போய்விட்டதோ .......
இப்படியே போனால்
ஓர்நாள் நிலமெல்லாம் நீராகி
கடல்தாயே நீதான்
பூமியில் பறந்திருப்பாய்..........
அன்று ,
கொஞ்சும் பறவையும்
கொடும் மிருகமும்
கூட்டமாய் மனிதரும் என
எவருமே இருக்கமாட்டார் ..........
அலையில்லா கடலும்
கரையில்லா நிலமும்
கருணையில்லாத கடலுமாய்
காட்சிதர போகிறாய் .......
கடல்வாழ் உயிரினங்கள்
பெருத்து கொழுத்து -
நீரே நீ அதன்மேல் மிதக்கும்
காலமும் வரலாம் ........
நிலைத்தைஎல்லாம் பேராசையால்
விழுங்கிக்கொண்ட நீ
விம்மி அழும் காலம்
விரைவில் வந்தாலும் ஆச்சரியமில்லை .......
அன்றோடு தென்றலாய் இருந்த
உன் காற்றின் வாசம்
நாற்றமெடுத்து பூமியியே
நரக வாடை எடுக்கும் என்பதில் ஐய்யமில்லை.....