நொடிபொழுது
வானிலை மாறுது வாசலில் தூறுது
நான் இனி நனைந்திட
நதியென கரைந்திட ...
பூமழை தூவுது பூவித்ழ் அவிழிது
பூவினை பார்த்திட
புதிதாய் மலர்ந்திட ...
கடலலை தேங்குது கனவினில் தோனுது
கயல்விழி காட்டிட
கருவினில் பூட்டிட ...
நிலவொளி மறையுது நிளமெங்கும் ஒளிருது
நிஜமென புகட்டிட
நிழலென நினைத்திட ...
விழிகளை காணுது வழிநிலை தேடுது
பனிமழை பொழிந்திட
பகலினில் குளிர்ந்திட ...
செவிகளில் கேட்குது கனவினில் பூக்குது
இசைக்குயில் மீட்டிட
இரவினில் தோற்றிட ...
நொடிகளும் நகருது உடைகளும் உலருது
உனக்கென காத்திட
உடலினில் பூத்திட ...
இதயத்தில் கேட்குது இடையினில் கூட்டுது
இசையொன்று இசைத்திட
தசையொன்று அசைத்திட ...
கதிரவன் மறையுது கதைகளும் முடியுது
காலையில் உதித்திட
காலத்தை நகர்த்திட ...
கனிகளும் கரையுது காரணம் புரியுது
கனிரசம் பருகிட
கடலென உருகிட ...
வானமும் உறையுது வழிகளும் மறையுது
உசுரென உணர்ந்திட
உரிமையை பகிர்ந்திட ...
உடலெங்கும் சிலிற்குது உணர்வையும் இழக்குது
உனைகொஞ்சம் உரசிட
உன்னோடு பேசிட ...