காதல் கொண்டதால்

நெஞ்சில் நெஞ்சில் ஏனோ
உனைக் காதல் கொண்டேன்
கொஞ்சும் அழகில் தானோ
என் சிரிப்பை கண்டேன் ...

நஞ்சை போல நானும்
பல நாளாய் இருந்தேன்
தஞ்சை போல இன்று
புது சிறப்பை பெற்றேன் ...

உன்னை கண்டதால் தானோ
என் பிறவியை அறிந்தேன்
தன்னை மறந்ததால் ஏனோ
புது கவிதையாய் தெரிந்தேன் ...

தென்றல் வீசும் காற்றில்
தனிமரமாய் இருந்தேன்
காதல் வீசும் காட்டில்
பல கிளையாய் வளர்ந்தேன் ...

காதல் போகும் போக்கில்
கனவு போலே மாறினேன்
கால்கள் போகும் பாதையில்
வானம் போல தூறினேன் ...

உனை நீங்கி செல்லும்போது
மனத்தில் வீரம் கொண்டேன்
கொஞ்ச தூரம் போகப்போக
பாரம் கூடும் கோரம் கண்டேன் ...

எழுதியவர் : பிரபாகரன் (26-May-14, 1:33 pm)
சேர்த்தது : பிரபாகரன் செ
Tanglish : kaadhal kondathaal
பார்வை : 65

மேலே