வெண்ணிலாவே
நெஞ்சாங்கூட்டில் நீயிருக்க
நெத்தி பொட்டில் தலைவலிக்க
நெரிஞ்சி முல்லாய் மனமுருக
உன்நெனப்பு உள்ளூரே ஏங்குது
ஒன்னு மட்டும் சொல்லனும்னு தோணுது ...
புத்தகத்தை நீ படிக்க
பக்கமிருந்து பார்த்திருக்க
சொக்கி சொக்கி நான் துடிக்க
உன் கண்கள் எதேதோ தேடுது
என் பார்வை மெல்ல மெல்ல மாறுது ...
நேரத்திற்கு காத்திருக்க
நித்திரைய நான் தொலைக்க
நெஞ்சிக்குள்ள அலையடிக்க
சின்னபையன் போல மனசு வாடுது
சிறு நூலபோல என்னுடம்பு நோகுது ...
உயிர் கொஞ்சம் வலித்திருக்க
உறவோடு சிரித்திருக்க
உன்னாலே நடித்திருக்க
பிறறோடு உரையாட மறுக்குது
உன்னோடு உறவாட மனம் தவிக்குது ...
நித்தம் உன்ன நெனச்சிருக்க
செத்து செத்து நான் பிழைக்க
கண்ணீர் போல வாழ்ந்திருக்க
உன்னைவிட்டு பிரியாமல் நெஞ்சு துடிக்குது
கண்ணைவிட்டு மறையாமல் கண்ணீர் வழியுது ...
உசுருக்குள்ள உனை பிரிக்க
உயிரை கொஞ்சம் கையில் எடுக்க
மனமின்றி அதை மறுக்க
உள்ளம் மட்டும் உருகாமல் உடல் சாவுது
உதிரம் மட்டும் உரையாமல் உயிர் போகுது ...