காதலைத்தேடி

காதலை தேடி:

கனவே கனவே
கனவில் கொஞ்சம் வருவாயோ
கனவில் வாழும்
வாழ்வை நீ தருவாயோ
கனவில் உன்னை
நினைவாய் பார்த்த
என் இமைகள்
இரவில் மெல்ல
இதமாய் தூங்க
விடுவாயோ ...

நினைவே நினைவே
நினைக்கும் வரத்தை தருவாயோ
நெஞ்சில் நினைவை
நிலையாய் நிறுத்தி செல்வாயோ
நினைவில் என்னை
மெதுவாய் மறந்த
உன் உருவம்
பகலில் உள்ள
பனிபோல் என்னில்
படர்வாயோ ...

இதயம் மெல்ல
இடம் மாறிப்போனால்
இயல்பாய் உன்னை காண்பேனோ
இதையும் சொல்ல
உனை தேடி வந்தால்
மனமும் இன்றி கரைவேனோ ...

மனதில் உள்ள
வலி ஆறிப்போக
முறையாய் என்னை பார்ப்பாயோ
மதியும் கெட்டு
வழிமாறி போக
விதைபோல் மூடி மறைவாயோ ...

கரைதான் என்று
நுரைதேடி போனால்
அலையாய் வந்து கலைவாயோ
மலைதான் என்று
மணம் வீசி போனால்
மழையாய் என்னுள் பொழிவாயோ ...

உயிரே உயிரே
உனை நீங்கிபோனால் உணர்வாயோ
உடலால் உயிரை
உருமாறி என்னை கொள்வாயோ
சுவாசம் என்ற
உயிர்மூச்சை பருகும்
என் உதிரம்
உறவில் உள்ள
உயிர்நாடி போல
உறையாதோ ...

எழுதியவர் : பிரபாகரன் (26-May-14, 1:43 pm)
பார்வை : 84

மேலே