எண்ணங்களை எழிலாக்குவீராக

பாவத்தில் பாசத்தோடு பங்கெடுத்தாய்..
சோகத்தை சுகமாக சுமந்தாய்..
வேதனைகளை விரும்பி வரவேற்றாய்..
சிலுவை மரத்தில் சித்திரமாய் சிரித்தாய்...
இருதயமற்றோரின் இருப்பானிகளுக்கு இசைந்தாய்...
செம்மேனியிலிருந்து சென்ற செங்குருதிக்கு
இரங்காத இரக்கமற்றோர்க்கு இரங்கினாய்..
தாயுமானவனே...
பாவியாய் மறைந்த பரலோகப் பிதாவே
பாவியெம் பாவம் போக்கி
என் எண்ணங்களை எழிலாக்குவீராக.....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (26-May-14, 2:46 pm)
பார்வை : 714

மேலே