காலங்கள் ஓடுது

காலங்கள் ஓடுது
கண்ணிமை துடிக்குது
கனவுகள் இன்னும்-
கரையேற வில்லை!

பருவங்கள் மாறுது
பாதங்கள் வலிக்குது
தாகங்கள் இன்னும்-
தீரவே யில்லை!

வண்டுகள் சுற்றுது
வாடும் நேரம் வந்தது
மலர்களிலே இன்னும்-
மது சுரக்க வில்லை!

குயிலொன்று பாடுது
காற்றில் ராகம் கரையுது
உட்கார்ந்து ரசித்திட
ஓரிடம் கிடைக்கவில்லை!

03.06.1995

எழுதியவர் : மனோ & மனோ (26-May-14, 3:54 pm)
சேர்த்தது : கிறிஸ்டல் மனோவா
Tanglish : kaalangal ooduthu
பார்வை : 65

மேலே